வைகைச் செல்வன், பூனாட்சி, கே.சி. வீரமணி அமைச்சர்களாக பதவியேற்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று அமைச்சர்களும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில், தமிழக ஆளுநர் ரோசய்யா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கே.சி.வீரமணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வைகைச் செல்வனுக்கும், கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவிபிரமாணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் ஆளுநர் ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
8 வது முறையாக மாற்றம்
தமிழக அமைச்சரவையில் 8-வது முறையாக மாற்றங்கள் செய்து, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பரிந்துரை செய்தார்.

இதன்படி,பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள், சிறை, பணியாளர் நலன், ஊழல் தடுப்பு ஆகிய இலாகாக்களை கவனித்து வந்த என்.ஆர்.சிவபதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய் நீக்கப்பட்டார். மேலும், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திராவும் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications