மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் வசூல்: சிபிஐ 'வலைவீச்சு'.. அமைச்சர் விஜய் பதவி போனது ஏன்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விஜய்யின் வசூல் வேட்டை குறித்து செய்தி வெளியானதை அடுத்தே அவரது பதவி பறிபோனது என்று கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் விஜய் சுகாதாரத் துறை அமைச்சராகவும், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.
விஜய்யின் பதவி திடீர் என்று பறிபோனதற்கான காரணம் என்ன என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய்யின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இந்த விவகாரத்தில் விரைவில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிது.
மேலும் வேலூர் மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ஒரு பெண்ணை விஜய்யின் ஆதரவாளரான ஒரு அதிமுக நிர்வாகி தாக்கி, சேலையைக் கிழித்து அராஜகம் செய்த விவகாரமும் வெளியானது. அந்த நபருக்கு விஜய் தொடர்ந்து ஆதரவாக இருந்த நிலையில் அவர் மீதும் பெண் மீதும் வழக்குகள் பாய்ந்தன. இந்த விவகாரத்தில் கட்சியின் பெயர் நாறியது.
இதையடுத்து டாக்டர் விஜய்யின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications