சவால் விடும் பொருளாதாரம், சரியான பாதையில் நாம்... பட்ஜெட் குறித்த ப.சிதம்பரத்தின் விளக்கம்
டெல்லி: மத்திய பட்ஜெட் யார் மீதும் பெரிய அளவிலான சுமையை ஏற்றாமல் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்துள்ளது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நேற்று ப.சிதம்பரம் லோக்சபாவில் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். தனது பட்ஜெட் குறித்து அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.
பட்ஜெட் தயாரிப்பின்போது அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயங்கள், முக்கியப் பிரச்சினைகள் குறித்த நிலைப்பாடு, மானியம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விளக்கினார் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரத்தின் பேட்டியிலிருந்து சில துளிகள்...

சவால் விடும் பொருளாதாரம்
நமது பொருளாதாரம் பல்வேறு வழிகளில் நமக்கு சவாலானதாகவே இருக்கிறது. அந்த சவால்களை நான் பொருளாதார ஆய்வறிக்கையில் பட்டியலிட்டுள்ளேன். அதை சமாளிப்பதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக அரசின் முன்பு உள்ளன. அதிலிருந்து சிலவற்றை எடுத்துத்தான் பட்ஜெட்டில் வைத்துள்ளேன்.

முன்னேறிப் போக வேண்டியது அவசியம்
இதை வைத்துக் கொண்டு நாம் முன்னோக்கி, முன்னேறிப் போக வேண்டியது அவசியம். நமது பணி இத்துடன் நின்று விடக் கூடாது. தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய உள்ளன. அதில் முதல் படிதான் இந்த பட்ஜெட்.

சரியான பாதையில்தான் போகிறோம்
நாம் சரியான பாதையில்தான் போகிறோம் என்பதே இந்த பட்ஜெட் மூலம் நான் மக்களுக்குத் தரும் முக்கிய விளக்கமாகும். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உந்துதலை இந்த பட்ஜெட்டில் நான் அளித்துள்ளேன்.

மேலும் சில சீர்திருத்தங்கள் விரைவில்...
மேலும் சில சீர்திருத்தங்களை விரைவில் அறிவிப்பேன். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் சமயத்திலும், நிதி மசோதா மீதான விவாதத்தின்போதும் அவை அறிவிக்கப்படும்.

நிதிப் பற்றாக்குறையை சமாளித்துள்ளோம்
நாம் மிகவும் கடுமையாகப் போராடி நிதிப் பற்றாக்குறையை குறைத்து கட்டுக்குள் வைத்துள்ளோம். நிதிப் பற்றாக்குறை அளவு தற்போது 5.2 சதவீதமாக உள்ளது. நம்மால் எதுவும் முடியும் என்பதை அறிந்து கொள்ள இது ஒரு நல்ல உதாரணம்.

ஏற்றுமதி கூட வேண்டும்
நிதிப் பற்றாக்குறையை தொடர்ந்து குறைந்த அளவிலேயே வைத்திருப்பதற்கு ஏற்றுமதி அளவு அதிகரிக்க வேண்டியதும், இறக்குமதி குறைய வேண்டியதும் அவசியமாகும்.

தேவையில்லாத இறக்குமதியைக் குறைக்க வேண்டும்
நமக்குத் தேவையில்லாத பல பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக தங்கம். இதன் இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அதேபோல பிற பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கினால் நாம் இறக்குமதி அளவைக் குறைக்க முடியும்.

பணவீக்கம்
2013-14ம் ஆண்டு நமக்கு வளர்ச்சியில் நல்ல ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன். பணவீக்கம் கட்டுப்படும் என்றும் நம்புகிறேன். முதலீடுகள் அதிகரிக்கும் என்று நம்புகிறேன். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டியும் நாம் போயாக வேண்டும். அப்படிப் போகும்போது நிச்சயம் நமது பொருளாதாரம் நல்ல மீட்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

வளர்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும்?
வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியைத்தான் குறிக்கும். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வேண்டும். பசியில் இருக்கும் மனிதனுக்கு உணவுதான் கடவுள். எனவே இவர்களின் தேவைகள் நிறைவடையும்போது வளர்ச்சியும் வந்து சேரும்.

நல்லாட்சிக்கு சரியான சோதனை
காங்கிரஸ் தலைமையிலான அரசின் நல்லாட்சிக்கு அடுத்த ஆண்டு கடும் சோதனையாக அமையும். ஆனால் அதை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது. கல்வி, சுகாதாரம், உணவு ஆகிய துறைகளில் நல்ல வளர்ச்சியை நாம் அடையப் போகிறோம்.

எரிபொருள் மானியம் குறையும்
வரும் நாட்களில் எரிபொருட்களுக்கான மானியம் வெகுவாக குறையும். வேறு வழியில்லை. இதைச் செய்துதான் தீர வேண்டும்.

ரூ. 80,000 கோடி உணவு மானியம்
உணவு மானியம் ரூ. 80,000 கோடியாக இருக்கும். ஒருவேளை இதற்கு மேலும் பணம் தேவைப்பட்டால் அரசு அதையும் கொடுக்கும்.

வரி வருவாய் உயரும்
வரி வருவாயைப் பொறுத்தவரை, பொருளாதாரம் 5 சதவீதம் என்ற அளவுக்கு வளர்ந்து வருகிறது. மறுபக்கம் வரிவருவாயின் வளர்ச்சி 16.7 சதவீதமாக உள்ளது. எனவே அடுத்த ஆண்டு வரி வருவாய் விகிதம் 19 சதவீதமாக உயரும் என்று நம்புகிறேன்.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைக்கும் வருவாய் மேலும் அதிகரிக்கும். இந்த ஆண்டு நமக்கு வெறும் ரூ. 1000 கோடியே வருவாய் கிடைத்துள்ளது. இது மிகவும் சிறிய தொகையாகும். ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த நிலையற்ற தன்மை நிலவுகிறது. இருப்பினும் இது சரியாகும். 2வது சுற்றில் நல்லதொரு தொகை அரசுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசுப் பங்குகளை விற்பது
அரசு நிறுவனங்களில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் அடுத்த நிதியாண்டில் ரூ. 40,000 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எட்டுவோம்.

எல்லோரும் பெரும் பணக்காரர்களாவோம்
எல்லோரும் சூப்பர் ரிச் - அதாவது பெரும் பணக்காரர்களாக வேண்டும். அதுதான் எனது விருப்பம். இந்த நாட்டில் உள்ள அனைவரும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், அனைவரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும்.

விவாதிக்கலாம் வாருங்கள்
பட்ஜெட்டில் உள்ள ஒவ்வொரு அம்சம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். அதற்கு அரசும், நானும் தயாராகவே இருக்கிறோம். யாருக்கு என்ன கவலை இருந்தாலும் அதைத் தெரிவிக்கலாம். அதற்கு அரசு உரிய பதிலை தரும். பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நிதி மசோதாவும் நிறைவேறும்.

இது ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்டே
நிச்சயம் இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் இல்லை. ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்தான். இதுதொடர்பாக சமாஜ்வாடிக் கட்சி தெரிவித்திருக்கும் கருத்தை நான் ஏற்க மாட்டேன்.

இந்த அரசின் பட்ஜெட் மக்களுக்குப் பிடிக்கும்
இது மக்கள் விரோதப் பட்ஜெட்டா, மக்களுக்கான பட்ஜெட்டா என்ற விவாதமே தேவையில்லை. இது மக்களுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்தான். மக்களுக்கு நல்லது செய்யவே இந்த பட்ஜெட். இந்த பட்ஜெட்டை முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், ஆராய்ந்து பார்த்தால் மக்கள் இந்த பட்ஜெட்டை விரும்புவார்கள், இதைத் தயாரிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிகச் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்றார் ப.சிதம்பரம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications