கோலாலம்பூரில் ஆகஸ்ட் 15-ல் 12 வது உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கம்
சென்னை: உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறுகிறது என்று அதன் தலைவர் சி.ம.இளந்தமிழ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரின் மலாயப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இம் மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கருத்தரங்கிற்கு கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை என்ற கருத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.
செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கிய ஐ.ஓ.எஸ்.ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல், மின்நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications