அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த விமானம்: தூக்கம் போட்ட விமானி!

இந்த சம்பவம் நடந்தது 2011ம் ஆண்டில் தான் என்றாலும் அது இத்தனை காலம் மூடி மறைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இப்போது இந்த விவரம் வெளியே வந்துள்ளது.
இதை நியூசிலாந்து போக்குவரத்து அமைச்சர் ஜெர்ரி பிரவுன்லீயும் உறுதி செய்துள்ளார்.
போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தை இரு விமானிகள் இயக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு விமானி தூங்கிவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின் விழித்த அவர் மீண்டும் தூங்கிவிட்டார். இது நடந்தபோது அந்த விமானம் அட்லாண்டிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தது.
இன்னொரு பைலட் அவரை எழுப்ப முயன்றதோடு விமானத்தையும் பிரச்சனையில்லாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.
லண்டனில் இருந்து கிளம்பிய அந்த விமானத்தை இயக்கியபோது தனக்கு மிகவும் சோர்வாக இருந்ததாகவும், லண்டனில் முதல் நாள் சரியாக தூங்காததே அதற்குக் காரணம் என்றும் அந்த பைலட் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.
லண்டனில் இந்த பைலட் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஏசியில் பிரச்சனை இருந்ததாகவும், இதனால் இரவு 3 முறை அறைகளை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், தூக்கம் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை அந்த பைலட் தானாகவே முன் வந்து அளித்துவிட்டதால், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என்று ஏர் நியூசிலாந்து அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications