சசி பெருமாளிடம் பேச்சு .. அதிகாரிகள் பிசியாக இருப்பதாக கூறினாரா அமைச்சர் விஸ்வநாதன்?

அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்றும் சசி பெருமாள் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.
சசி பெருமாள் 32-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அடுத்தடுத்து அவர் ரத்த வாந்தி எடுத்து வருகிறார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், மின்துறை அமைச்சரும், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சருமான ஆர்.நத்தம் விசுவநாதனை சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது சசி பெருமாளின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் நான் ஏற்கனவே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த செல்லுமாறு கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை என்று தெரிகிறது.
பொதுவாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளை தொடர்பு கொள்வது என்பது சிரமம். தற்போது தமிழ்நாடு முழுவதும் மது விலக்கிற்காக ஏராளமான பேர் போராடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?.
தற்போது யாரெல்லாம் சசி பெருமாளை தூண்டிவிடுகின்றனர் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அவரை சந்திக்க சென்ற குழுவினர் தெரிவித்தனர்.
அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications