நவீன ஹோசி மின்னாக உருவெடுத்துள்ளார் கருணாநிதி.. தமிழீழம் மலரும் - ராசா

காட்பாடியில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராசா பேசுகையில்,
தமிழக அரசியல் வரலாற்றை சுருக்கிப் பார்த்தால் பக்தவச்சலம், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கிறது.
குலக்கல்வித் திட்டம் என்பது ராஜாஜியின் அடையாளம், கிராமங்கள்தோறும் பள்ளி என்பது காமராஜரின் அடையாளம், சத்துணவு என்பது எம்ஜிஆரின் அடையாளம். கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டுசென்றது, பெண்களுக்கும் சொத்தில் பங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் கலைஞருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு என்ன அடையாளம் உள்ளது?
ஜெயலலிதாவுக்கு எந்த அடையாளமும் இல்லை. அரசிதழில் காவிரி தொடர்பாக அரசாணை வெளியிட்டது, தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது தனது சாதனை என்கிறார்.
பதவி, ஆட்சியில் இருக்கும்போது சிலநேரம் சரிவு ஏற்படுகிறது. பதவி மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட நான் எந்தத் தவறும் செய்யவில்லை. செல்போன் கட்டணம் ரூ. 1 என்பதை 30 காசாக குறைத்தது, சராசரி தொலைபேசிக் கட்டணம் ரூ.300 என்பதை ரூ.100 ஆக்கியது, 30 கோடி பேர் பயன்படுத்திய செல்போன்களை 90 கோடி பேருக்கு கொண்டு சென்றது ஆகிய மூன்றுதான் நான் செய்த தவறுகள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் தயாரிக்கப்பட்டவை என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறுகிறார். அவருக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு வியட்நாம் திரும்பும்.
வியட்நாம் போரின்போது 9 வயது சிறுமி குண்டு வீச்சுகளுக்கு நடுவில் நிர்வாணமாக ஓடும் படம் வெளியானது. இது ஹோசிமின் புரட்சிக்கு வித்திட்டது. அதேபோல, பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படம் வெளியாகியுள்ளது. இப்போது ஒரு ஹோசிமின் உருவாகியுள்ளார். அவர்தான் கலைஞர். போர்படை தளபதியாக ஸ்டாலின் இருக்கிறார். வியட்நாம் போல விரைவில் தமிழீழம் வெல்லும் என்றார் ராசா.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications