வடிவேலு, சீக்கிரமா ஏதாச்சும் படத்துல நடிங்க, இல்லாட்டி...!
சென்னை: வருடா வருடம் முருகன் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக காவடி எடுப்பார்கள், அலகு குத்துவார்கள் பக்தர்கள். அப்போது இந்த வருடம் என்ன மாதிரி அலகு குத்தலாம் என்று குடும்பத்தோடு விவாதித்து முடிவெடுப்பார்கள். அதே ரூட்டில் வருடா வருடம் வரும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று கும்பல் கும்பலாக யோசித்து விதம் விதமான டிசைனில் கொண்டாடி அசத்தினார்கள் அதிமுகவினர் இந்த முறையும்.
ஜெயலலிதா பிறந்த நாள்தான் சமீபத்தில் அதிமுகவினரின் முக்கிய விஷயமாக இருந்தது. அதை விதம் விதமாக கொண்டாடி மேலிடத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப துடியாய்த் துடித்துப் போய் விட்டனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
என்ன மாதிரியான முறையில் கொண்டாடினால் அம்மா காது வரைக்கும் போகும் என்பது குறித்து பெரிய அளவில் டிஸ்கஷன் செய்து அரங்கேற்றி அசத்தி விட்டனர் நம்ம ரத்தத்தின் ரத்தங்களான உடன் பிறப்புகள்.
அதுகுறித்த ஒரு ரவுண்டப்...

தண்ணீரில் தொபுக்கடீர்... இது சோழவந்தான் ஸ்டைல்
சோழவன்தான் அதிமுக எம்.எல்.ஏ. கருப்பையா நிறையவே யோசித்து அசத்தலான ஒரு ஐடியாவை அமல்படுத்தி அம்மா பிறந்த நாளை கலக்கி விட்டார்.

என்ன செய்தார் கருப்பையா...?
அட்டகாசமான டிராக் சூட்டும், கட்சிக் கொடி நிறத்தில் ஒரு டி-ஷர்ட்டும் போட்டுக்கொண்டு 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தொபுக்கடீர் என்று குதித்துவிட்டார் கருப்பையா.

உள்ளே எட்டிப் பார்த்தா...!
கூட்டத்தில் கூடியிருந்தோர் அரண்டு மிரண்டு போய் அரக்கப் பரக்க அடித்துக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தால்... கையையும் காலையும் செங்குத்தாக நீட்டியபடி கட்டை மாதிரி மிதந்துகொண்டிருந்தார் கருப்பையா.

செம 'தம்'முப்பா...!
அப்படியே ஐந்து நிமிடம் தம் கட்டியபடி அவர் வாட்டரில் படுத்துக் கிடக்க, இந்த மேட்டரை பிரபலப்படுத்த வேண்டுமே என்று துடித்த அதிமுகவினர் இதைப் பார்த்து வியக்க, பத்திரிக்கை புகைப்படக்கார்கள் கேமராக்களை எடுத்து படக் படக்கென கிளிக் செய்தனர்.

'ஜலதோஷம்' செய்த கருப்பையா...
இப்படியாக கிணற்றுக்குள் குதித்து நீரில் மிதந்த கருப்பையா ஒரு வழியாக மேலே வந்தார். அப்போது உற்சாக மிகுதியில் ஒரு தொண்டர், கிணற்றில் குதித்து 'ஜலதோஷம்' செய்த கருப்பையா எம்.எல்.ஏ. வாழ்க என்று சவுண்டு விட கருப்பையா டென்ஷனாகி விட்டார். அது ஜலதோஷம் இல்லப்பா, ஜலபிரதஷ்ணம், யோகா என்று கிளாரிபிகேஷன் கொடுத்தார்.

புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, தமிழகத்தின் நிரந்தர முதல்வர்..
பிறகு அந்தத் தொண்டரை விட்டு விட்டு, பத்திரிகைக்காரங்க வந்தாச்சா என்று கேட்டு விட்டு ஆரம்பித்தார்... புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், நாளைய பாரதப் பிரதமர் அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்கள் நீடுழி வாழவேண்டி இந்த ஜலபிரதஷ்ண யோகாசனத்தைச் செய்துள்ளேன் என்று சொல்ல மறுபடியும் கைதட்டு... பாராட்டு...

கொரியாவுக்கும் ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்?
மதுரை பக்கம் போனால் கொரியா நாட்டு விளையாட்டு வீராங்கனைகளை சிலர் அழைத்து வந்து களேபரப்படுத்தி விட்டனர். அதை நிகழ்த்தியவர்கள் ஆரப்பாளையம் பகுதி அதிமுகவினர்.

கபடிப் போட்டிக்கு வந்தவங்களை கூப்பிட்டு
இந்த 10 கொரிய வீராங்கனைகளும் கபடி விளையாடுபவர்கள். தூத்துக்குடிக்கு போட்டிக்காக வந்தவர்களை இங்கே கூட்டி வந்து விட்டனராம். சட்டை, அரைக்கால் டிராயரோடு இருந்தவர்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கூட்டிச் சென்று மாலை போட்டு போட்டோ எடுத்து அனுப்பி வைத்தனர்.
வந்தவர்கள் கொரியப் பெண்களின் கால்களையே வெறித்துப் பார்த்தனர்.. என்ன காரணமோ தெரியவில்லை...!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications