லஞ்சம் விவகாரம்: பங்காரு அடிகளார் மனைவி மகன்களிடம் இன்றும் சி.பி.ஐ. விசாரணை
சென்னை: பல் மருத்துவமனையில் மேற்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவ கல்வி கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் டாக்டர் முருகேசன், கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனி உட்பட பலரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கில், லஞ்சப்பணம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.இதையடுத்து லட்சுமி உட்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். சென்னை ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டிலும் லட்சுமி, அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, முன்ஜாமீன் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் டி.எஸ்.பி, பிரதீப்குமார் தலைமையில் நடந்த விசாரணைக்காக லட்சுமி, அன்பழகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் நேற்று காலை 10.30 மணிக்கு சி.பி.ஐ, அலுவலகத்திற்கு வந்தனர். உடன் வக்கீல்களையும் அழைத்து வந்திருந்தனர். இவர்கள் வருகையையொட்டி சி.பி.ஐ. அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு 3 பேரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் லஞ்சப்பணம் கொடுத்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் லஞ்சப்பணம் எப்போது, எவ்வளவு தொகை கைமாறியது, எந்தெந்த வழிகளில் வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தாக கூறப்படுகிறது.
மூன்று பேரிடமும், டி.எஸ்.பி. பிரதீப்குமார் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, விசாரணை இன்றும் தொடர்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications