4 தொகுதிகளில் ஜெ. வேட்புமனு: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிபட்டி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து தி.மு.க. முன்னாள் எம்.பி. குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தேர்தல் அதிகாரியிடம் விரிவான விளக்கத்தை கேட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications