கடலூர் மணியின் மரணத்திற்குப் பிறகாவது தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவேண்டும்.. கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
கடலூர் வாலிபர் மணி, கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிங்கள அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே தீக்குளித்து; சிகிச்சை பலனின்றி மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைகிறேன், வேதனையடைகிறேன்.
பாலச்சந்திரனின் கொடுமையான கொலைக்குப் பிறகும், கடலூர் மணியின் பரிதாபகரமான இந்தத் தீக்குளிப்பு மரணத்திற்குப் பிறகுமாவது இந்திய அரசு தமிழர்களின் உணர்வினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முன்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முன் வர வேண்டும்.
மணியை இழந்து வாடும் அவருடைய அன்னையாருக்கும், மனைவி மக்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications