இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி 12ம் தேதி தமிழகத்தில் பந்த்: டெசோ அழைப்பு

டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், துணைப் பொது செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்கிறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலையை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 12ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும். இது கட்சி சார்பற்ற வேலைநிறுத்தம் ஆகும். இதற்கு தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வியாபார நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மணிக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications