காலிங் பெல் அடித்து லாரி டிரைவர் மனைவியிடம் கண்டபடி பேசிய வாலிபர்... போலீஸில் ஒப்படைப்பு
சென்னை: வீட்டில் தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவியிடம், காலிங் பெல் அடித்து கதவைத் திறக்க செய்து ஆபாசமாக பேசி அழைத்த நபரை போலீஸார் பிடித்தனர்.
சென்னை, நெற்குன்றம் ஸ்ரீலட்சுமி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவர். இவரது மனைவி ராஜலட்சுமி (36).
2 நாட்களுக்கு முன்பு பிரபாகரன் வேலைக்குப் போய் விட்டார். ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காலிங் பெல் அடித்தது. இதையடுத்து ராஜலட்சுமி கதவைத் திறந்தார். வெளியே ஒரு வாலிபர் நின்றிருந்தார்.
அவரிடம் என்ன வேண்டும் என்று ராஜலட்சுமி கேட்க, அதற்கு அந்த நபர் ராஜலட்சுமியிடம் ஆபாசமாகப் பேசினார். மேலும் தன்னுடன் வருமாறும் அழைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராஜலட்சுமி. உடனே உதவி கோரி அவர் குரல் எழுப்பினார்.
அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கமாக ரோந்து வந்து கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் பீமராஜ் விரைந்து வந்து ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்தார். காவல் நிலையம் கொண்டு போய் அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் நாராயணன் என்றும், கிண்டி அம்பாள் நகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
ராஜலட்சுமியிடம் ஏன் அவர் கதவைத் தட்டி வம்பு செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications