இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தவிடக் கூடாது: லோக்சபாவில் தம்பித்துரை

லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது பேசிய தம்பித்துரை, இலங்கையில் 60 ஆண்டுகளாக தமிழர் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கையில் நிகழ்த்தப்பட்டது ஒரு இன அழிப்பு நடவடிக்கை.தமிழக சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இலங்கை இறுதிப் போரில் 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை விவகாரத்தில் இந்தியா மவுனமாக இருந்தாலும் இதர நாடுகள் கையில் எடுத்திருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் இந்தியா அசட்டையாக இருக்கிறது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் நிலை என்ன?காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. அப்படி நடத்துவது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அவமானம். இலங்கைஅண்டை நாடு என்பதாலேயே மவுனமாக இருந்து விட முடியாது? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக மகாத்மா காந்தி போராடினார். அவர் பிறந்த தேசம் அண்டை நாட்டிலேயே இருக்கின்ற தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாதா?
1999ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் இருந்து வருகிறது திமுக. பாஜகவோ காங்கிரஸோ இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? (திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு). இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றார் அவர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications