உ.பி. டிஎஸ்பி அடித்து, இழுத்துச் சென்று சுட்டுக் கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை
லக்னோ: உத்தர பிரதேச டிஎஸ்பி ஜியா உல் ஹக் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் குந்தா அருகே உள்ள கிராமத்தில் நிலப் பிரச்சனையில் அக்கிராமத்தின் தலைவர் மற்றும் அவரது சதோரர் கொலை செய்யப்பட்டது பற்றி விசாரிக்க டிஎஸ்பி ஜியா உல் ஹக் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு சென்றார். அப்போது அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து குந்தா தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ராஜா பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே ஜியா உல் ஹக்கை சுட பயன்படுத்தப்பட்ட புல்லட் மாயமாகியுள்ளது. மேலும் அவரது துப்பாக்கியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.
அதில், ஜியா உல் ஹக் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு அதன் பிறகு மார்பின் வலப்புறத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்கும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் தப்பிக்க முடியாது என்றும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications