அணு உலையை மூடக்கோரி 4 இடங்களில் நாளை முற்றுகை - 4000 போலீஸ் குவிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் ஏற்பட்ட கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் முன்னுக்கு பின் முரணான அறிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று போராட்டக்குழு கோரி வருகிறது. ஆனால் இதுவரை அரசு வெள்ளை அறிக்கை குறித்து பதில் இல்லை.
இதனை கண்டித்து தூத்துக்குடி துறைமுகம், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் பாறை மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகிய 4 இடங்களில் கடந்த பிப் 15ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கூடங்குளம் அணு உலையை கடல் வழியாகவும், தரை வழியாகவும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி வங்க கடலில் ஏற்பட்ட சூறைகாற்றால் படகுகள் பழுதானதால் இந்த போராட்டம் பிப் 27ம் தேதி ஓத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததால் பிப் 27ம் தேதி நடைபெற இருந்த போராட்டமும் ஓத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த முற்றுகை போராட்டம் மார்ச் 11ம் தேதி நடக்கும் என்று போராட்டகுழு ஓருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தார்.
இதையொட்டி நாளை 4 இடங்களில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த 4 பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஏற்கனவே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பணியில் இருந்த 1500 போலீசாரும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து 2500 போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் நெல்லை சரக டிஐஜி சுமித் சரண் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications