சென்னை லயோலா மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் திடீர் வாபஸ்!

போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி கோயம்பேட்டில் லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4- வது நாளாகத் தொடர்ந்தது. இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்துவந்த 8 மாணவர்களை அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திரண்டிருந்த 126 பேரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் 8 மாணவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்படுகிறது. அவர்கள் வேறு எதையும் சாப்பிட மறுத்து அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். இந்த மாணவர்களை லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் இன்று சந்தித்துப் பேசினார். அவர் செய்தியாளர்களிட பேசுகையில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராடத்தைக் கைவிட்டுவிட்டு வேறுவழிகளில் போராட வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென அவர்களது போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு லயோலா கல்லூரி முதல்வர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இருப்பினும் தங்களது போராட்டம் வாபஸ் பற்றி கருத்து தெரிவித்த மாணவர்கள், தாங்கள் தொடங்கி வைத்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இதைத் தொடர்ந்து எங்களது இந்தப் போராட்டத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்ட போராட்டங்களை பின்னர் அறிவிப்போம் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications