மகளுக்குக் கல்யாணம், தயவு செஞ்சு யாரும் வந்துராதீக.. கெஞ்சிக் கேட்கும் வடிவேலு!
சென்னை: தனது மகள் திருமணம் தொடர்பாக அழைப்பிதழ் கொடுத்து வரும் வைகைப் புயல் வடிவேலு, திமுக பிரபலங்களிடம் மட்டும் ரகசியமாக, தயவு செய்து யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே ஆசிர்வாதம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்து வருகிறாராம்.
வடிவேலு நிலை இப்படியாகிருக்கக் கூடாதுதான்.ரொம்பக் கஷ்டமான சூழல்தான். மனதளவில் மிகவும் நொறுங்கிப் போயுள்ள வடிவேலுவை தற்போது ஆறுதல் படுத்துவது மகளின் திருமணம் மற்றும் கையில் கிடைத்துள்ள சில புதிய படங்கள் மட்டு்மே.
மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளார் வடிவேலு. அந்தப் பணிகளில் தற்போது படு தீவிரமாக இறங்கியுள்ளார்.

மதுரையில் கல்யாணம்
வடிவேலு மகளின் திருமணம் மதுரையில் ஏப்ரல் 4ம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.

வடிவேலு மேற்பார்வையில்
மூத்த மகள் என்பதால் திருமண வேலைகளை வடிவேலுவே முன்னின்று கவனித்து பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

மதுரைக்கார மாப்பிள்ளை - ரசிகரும் கூட
வடிவேலு மகளைக் கரம் பிடிக்கப் போகும் மாப்பிள்ளையும் மதுரைக்காரர்தானாம். ஏரியா எது என்று தெரியவில்லை. வடிவேலுவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பாராம். இப்போது வடிவேலுவே மாமனாராக வருவதால் செம ஹேப்பியாக இருக்கிறாராம்.

அண்ணே கல்யாணம், ஆனா வராதீக...!
திருமணத்திற்கு முக்கியப் புள்ளிகளுக்கு மட்டுமே நேரடியாக அழைப்பு கொடுக்கவுள்ளாராம் வடிவேலு. மற்றபடி மிகுந்த ஆடம்பரமாக இல்லாமல் திருமணம் நடைபெறுமாம். மேலும் திமுக பிரபலங்களிடம் மிகவும் தணிந்த குரலில் அண்ணே இருந்த இடத்திலிருந்தே ஆசிர்வதிச்சா போதும்ணே, தயவு செய்து மண்டபத்துக்கு வந்துராதீங்கண்ணே என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அணுவளவும் ஆளாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications