இலங்கை தமிழர் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: இலங்கைத் தமிழர் விவகாரம், ராபர்ட் வதேரா நில விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பெரும் அமளி நிலவியது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட லோக்சபாவும் ராஜ்யசபாவும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
லோக்சபாவில் இன்று காலை கூடியதும் சபாநாயகர் மீராகுமார், முன்னாள் உறுப்பினர் வீரென் ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இலங்கை தமிழர் விவகாரம், ராபர்ட் வதேரா நில விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைக்காக அமளி ஏற்பட்டது. இதனால் லோக்சபா முடங்கியது.
திமுக எம்பி டி.ஆர்.பாலு அவையின் மைய பகுதிக்கு சென்று பிரபாகரனின் 12 வயது மகன் பிணை கைதியாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட படத்தை காண்பித்து கோஷமிட்டார். மற்ற திமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இதேபோல அதிமுக உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சனையைக் கிளப்பினர்.
பாஜக எம்பிக்கள் சோனியா காந்தியின் மருமகன் வதோராவின் நில மோசடி விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் கேள்வி நேரத்தை எடுத்தார். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவரால் சபையை நடத்த இயலவில்லை. இதை தொடர்ந்து சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியதும் இதே பிரச்சனைகளை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. மீண்டும் இதே பிரச்சனைகளால் அவையில் அமளி நிலவியதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல ராஜ்யசபாவிலும் இலங்கை தமிழர், வதேரா நில மோசடி உள்பட பல்வேறு பிரச்சனைகள் கிளப்பப்பட்டு தொடர்ந்து அமளியும் ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications