ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் முகாம் மீது தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து அங்குள்ள பள்ளி அருகே ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 தீவிரவாதிகள் அங்கு இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் முகாமைத் தாக்கிய பிறகு 2 தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பெமினா போலீஸ் அகாடமி பகுதியை தீவிரவாதிகள் ஏற்கனவே தாக்கியதால் அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு பலமாக இருக்கும். பெமினாவில் போலீஸ்காரர்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று உள்ளது. ஸ்ரீநகரில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலைக் கேட்டு இன்று பந்த் நடைபெற்று வருகிறது.
இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் துப்பாக்கிச்சூடு நடந்து வரும் இடத்தில் உள்ள பள்ளியும் இன்று மூடப்பட்டுள்ளது. பந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படாமல் இருந்துள்ளது. தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்கள் போல் உடை அணிந்து கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் பையில் குண்டுகள், ஆயுதங்களை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினர். பின்னர் முகாமைத் தாக்கினர்.
பெமினா பகுதி 1ஏ தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டுக்கு அருகில் உள்ளதால் தீவிரவாதிகள் நெடுஞ்சாலை வழியாக வந்துவிட்டு தப்ப வசதியாக உள்ளது.
இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், அவர்கள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications