ஹெலிகாப்டர் ஊழல்: முன்னாள் ராணுவ தளபதி தியாகி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

வி.வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைவரும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் தலைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலில், ரூ. 3600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுத்ததாக அசிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டனர். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. குழு, இத்தாலி சென்று சில ஆவணங்களை திரட்டியது. இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்தது. இது தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி., தியாகி மற்றும் அவரது உறவினர்களிடம் சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தியது.
இதைதொடர்ந்து தியாகியும், அவரது உறவினர்கள் ஜூலி மற்றும் டோக்சா தியாகியும் சி.பி.ஐ., தலைமையகத்தில் கடந்த 6-ம் தேதியன்று ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். முதல் விசாரணையில் போது சேர்க்கப்படால் இருந்த இருவர் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரொடியாவின் சகோதரர் சதீஷ் பக்ரொடியா மற்றும் ஐ.டி.எஸ் இன்போடெக் நிறுவனத்தின் தலைவர் பிரதாப் அகர்வால் ஆவர்.
ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதி எஸ்.பி.தியாகி, மற்றும் 12 பேர் மீது மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்துள்ளனர். மேலும் டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் அவரது அலுவலகம் மற்றும் வீடு என 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications