பல பெண்களுடன் தகாத உறவு... அரியலூர் மாஜி கலெக்டர் மீது மனைவி புகார்

செந்தில்குமார் தற்போது ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையராக இருக்கிறார். செல்வநாயகி கொடுத்துள்ள புகாரில், சென்னையில் உள்ள பெண்கள் நல வாரியத்தில் பணியாற்றும் பல பெண் அதிகாரிகளிடம் தனது கணவர் செந்தில்குமார் தகாத உறவு வைத்துள்ளதாகவும், அதில் சாமூண்டீஸ்வரி என்ற பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்த வழக்கில் போலீசார் தனது கணவனிடம் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஷாலினி, யாழினி என இரண்டு பெண் குழந்தைகள் தனக்கு உள்ளதாகவும், குழந்தைகளுடன் கடந்த 27ஆம் தேதி அரியலூர் கலெக்டர் அலுவலத்துக்கு வந்தபோது, தனது கணவர் ராஜஸ்ரீ என்ற பெண்ணுடன் சேர்ந்துகொண்டு மிரட்டி வெளியேற்றினார் என்றும், மனைவி மகள் என்று சொல்லிக்கொண்டு வந்தால் அதிகார பலத்தை பயன்படுத்தி வாழவே விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
செல்வநாயகி தர்மபுரி மாவட்டம் அரூரில் ஆசிரியையாக இருக்கிறார். மகள் ஷாலினி சென்னையில் கல்லூரியில் படிக்கிறார். யாழினி பிளஸ்டூ படிக்கிறார்.
மகளிர் மேம்பாட்டுத் திட்ட இணை ஆணையருடன் தொடர்பு
செல்வநாயகி இன்று புகார் கொடுக்க வந்தபோது அவருடன் மூத்த மகள் ஷாலினியும் வந்திருந்தார்.
செல்வநாயகி மேலும் கூறுகையில்,
நான் தற்பொழுது தர்மபுரி மாவட்டம் ஹரூர் டவுன் அரசினர் பெண்கள் மேனிலை பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறேன். எனக்கும், செந்தில் குமாருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் ஷாலினி, எஸ். ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டும், இளைய மகள் யாழினி, ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் டூவும் படித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே என் கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்து வருகிறது. பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்துக் கொண்டு எனக்கும், எனது மகள்களுக்கும், ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
என்னையும், எனது 2 மகள்களையும் முழுமையாக புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கும் அவர், தற்சமயம் சென்னையில் உள்ள மகளிர் மேம்பாட்டு திட்ட ஒழுங்கு இணை ஆணையர் ராஜஸ்ரீயுடன் தொடர்பில் இருக்கிறார்.
இதை நான் பலமுறை கண்டித்தேன். அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தேன். ஆனால் அவர் கலெக்டராக இருந்ததால், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மை காலமாக என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு, துன்புறுத்தி வருகிறார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் ஆர்.டி.ஓ.-வாக அவர் பணியாற்றியபோது, சாமுண்டீஸ்வரி என்ற வருவாய் ஆய்வாளருடன் நட்பிலிருந்தார்.அங்கிருந்து சென்னைக்கு மாற்றலாகி சென்ற பின்னர், சாமுண்டீஸ்வரிக்கும் இடமாற்றம் செய்து தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.
இது தொடர்பாக சாமுண்டீஸ்வரியின் கணவர், உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், சாமுண்டீஸ்வரி மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதால், அதுகுறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் என்னோடு சேர்ந்து வாழ எனது கணவர் செந்தில் குமாருக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
செந்தில்குமார் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு செல்வநாயகி விரிவான புகாரை ஏற்கனவே அனுப்பியிருந்தார. அதன் அடிப்படையில்தான் செந்தில்குமார் ஆட்சியர் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications