தோல்விக்கு மேல் தோல்வி.. இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது? பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்ட சூழலில், இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றது. ஏற்கனவெ அயர்லாந்து அணியிடம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் தோல்வி அடைந்தது. இதன்பின் இங்கிலாந்து அணியிடம் 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்தது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருக்கிறது.

Shreyas Iyer

இதனால் இந்திய அணி மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களுக்கு முன் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை சந்திப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்திய அணியை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற அட்வைஸ்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்தில் இருந்து நேராக ஜிம்பாப்வே பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. நாளை மறுநாள் தொடங்க உள்ள இந்த டி20 கிரிக்கெட் தொடர் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த டி20 தொடரில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதன்மை தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பிரப்சிம்ரன் சிங், குஜராத் அணிக்காக ஆடிய அசோக் குமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். அதேபோல் ரிங்கு சிங் மற்றும் மயங்க் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர். இதனால் இந்திய அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+