என்விடியா கூப்பிட்டால் மீண்டும் வருவேன்.. சீட் போட்டு வைத்த ஜென்சன்! ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட்!
வாஷிங்டன்: மீண்டும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்ற நிர்வாகம் அழைத்தால்.. அதற்கு ரெடி என்று ஜென்சன் ஹுவாங் கூறியிருந்த நிலையில், அப்படியான எந்த ஐடியாவும் இல்லை என என்விடியா நிர்வாக குழு கையை விரித்திருக்கிறது.
திருமணத்தை தாண்டிய உறவு மற்றும் சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த குற்றச்சாட்டில் என்வியா நிறுவனரும், சிஇஓவுமான ஜென்சன் ஹுவாங் சிக்கியிருந்தார். இதையடுத்து அவர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப், ஜென்சனுக்கு போன் போட்டு.. என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம், அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்காதீங்க! பதவியை தக்க வைத்துக்கொள்ள போராடுங்க.. மற்ற விஷயங்களை நான் பார்த்துக்குறேன் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும், வெளியிலிருந்து வந்த பிரஷர் காரணமாக, ஜென்சன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனாலும், இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட்டோமோ என்று அவருக்கு ஒரு பக்கம் சந்தேகம் இருந்தது.
எனவே, மீண்டும் சிஇஓ பதவிக்கு வர விரும்புவதாகவும்.. இதேபோல நிர்வாக குழு நினைத்து தன்னை அழைத்தால், நிச்சயம் வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு.. ஆனால், மீண்டும் பதவிக்கு வர ஆசைப்படுறியா? என்று அவர் மீது விமர்சனங்கள் வெடித்தன.
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான் என்விடியா நிறுவனத்தின் முதலாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், நிறுவனத்தின் லாபம் 103% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிகர லாபத்தை பொறுத்தவரை 2 மடங்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக டேட்டா சென்டர் பிரிவில்தான் அதிக லாபம் கிடைத்திருக்கிறது. என்விடியாவின் 'வேரா ரூபின்' ஏஐ சர்வர்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.
முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இந்த விஷயங்களையெல்லாம் கூறிவிட்டு, ஜென்சன் விவகாரத்திற்கு நிர்வாகக்குழு வந்தது. அவர் மீண்டும் என்விடியாவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டிருந்த விஷயம் குறித்து பேசிய என்விடியாவின் புதிய தலைவர் ஹார்வி சி.ஜோன்ஸ், ஜென்சனின் ராஜினாமாவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும், அவரை மீண்டும் பணியில் அமர்த்தும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ், இடைக்கால சிஇஓ-வாக பொறுப்பேற்றிருக்கிறார். நிறுவனத்தின் அனைத்து திட்டங்களும் வழக்கம்போல அப்படியே தொடரும் என்றும் அவர் கூறியிருக்கிறார். புதிய சிஇஓ-வை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிறுவனத்திற்கு உள்ளே இருந்தும்.. வெளியில் இருந்தும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும்.. இதற்காக 'ஹெய்ட்ரிக் & ஸ்ட்ரக்கிள்ஸ்' என்கிற நிறுவனத்தின் உதவியை நாடி வருவதாகவும் இடைக்கால சிஇஓ கூறியிருக்கிறார். மொத்தத்தில் ஜென்சனின் தொழில் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
