அமெரிக்காவுக்கு கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இடத்தில் அடி! ராணுவ ரகசிய நெட்வொர்க்கில் பெரிய ஓட்டை!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் மிக ரகசியமான கோப்புகளை டிரான்ஸ்பர் செய்ய பயன்படுத்தப்படும், 'NSANet' எனப்படும் ரகசிய சேவை நெட்வொர்க் மொத்தமாக முடங்கியிருக்கிறது. திடீரென ஏற்பட்ட இந்த முடக்கத்தால், மொத்த அமெரிக்காவும் அதிர்ச்சியில் உறைந்தது.

நாம் பயன்படுத்தும் கூகுள் போல இந்த நெட்வொர்க் இருக்காது. இது முழுக்க முழுக்க ரகசியமாக பராமரிக்கப்பட்டு வரும் நெட்வொர்க்காகும். ஃபைபர் ஆப்டிகல் கேபிள், செயற்கைக்கோள் இணைப்புகளை கொண்ட இந்த நெட்வொர்க்கில், அரசின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ரகசிய ஃபைல்களை அனுப்பியும், பெற்றும் வருகின்றனர்.

US in Shock as NSANet

வெளிநாட்டின் உளவு தகவல்கள், பயங்கரவாதிகள் ஷேர் செய்யும் தகவல்களை இடைமறித்து சேகரிக்க இந்த நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தேவையான ரகசிய தகவல்களும் இந்த நெட்வொர்க் மூலமாகத்தான் ஷேர் செய்யப்படுகிறது. இப்படியான அதி முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க், திடீரென நேற்று மல்லாக்க படுத்துவிட்டது. எவ்வளவுதான் தட்டி எழுப்பி பார்த்தாலும்.. நெட்வொர்க் மீண்டும் வேலை செய்யவில்லை.

அவ்வளவுதான் மொத்தமாக முடிந்தவிட்டது என்று நினைத்த அமெரிக்க அதிகாரிகள், உடனடியாக மற்ற ஆல்டர்நேட்டிவ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆக்டிவேட் செய்தனர்.

எதனால் இந்த பிரச்சனை வந்தது? என்று ஆய்வு செய்ததில்.. வெளியிலிருந்து எந்த தாக்குதலும் நடக்கவில்லை, வழக்கமான பராமரிப்பு பணிகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் பிரச்சனைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் சாஃப்ட்வேர் செக்யூரிட்டியில் பெரிய ஓட்டையை கண்டுபிடித்திருக்கின்றனர். இதை சரி செய்ய பழைய கணினி அமைப்புகளை புதுப்பிக்கும் பணியில் NASNet ஈடுபட்டிருந்தது. அப்போது, ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்து வந்திருக்கிறது.

இத வெளிநாட்டு உளவாளிகளாலோ அல்லது ஹேக்கர்களாலோ நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என, அந்நாட்டின் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டன் விளக்கமளித்துள்ளார். பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் NASNet மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. இப்படி ஏதாவது பெரிய பிரச்சனை வெடிக்கும்போது 3 வகைகளில் எச்சரிக்க விடுக்கப்படும். இதில் மஞ்சள் என்பது இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கையாகும்.

இந்த விளக்கமெல்லாம் ஓகேதான். ஆனால், AI ஏஜென்ட் இந்த ஓட்டையை கண்டுபிடித்திருந்து உள்ளே நுழைந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? மொத்த நிலைமையும் தலைகீழாக போயிருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கின்றனர். மட்டுமல்லாது தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இல்லை. அவர், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவருக்கான உளவு தகவல்கள் சரியான நேரத்தில் போய் சேரவில்லை எனில், அது பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும். ஆனால், நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+