ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்-அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: சென்னை திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே நடைபாதைக் கூரையில் ஒரு வாலிபர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று காலை அவரது உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
30 வயது மதிக்கத்தக்க அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்த நிலையில் தூக்கில் தொங்கினார். . நைலான் கயிற்றில் அவரது பிணம் தொங்கியது.
திருவள்ளூர் ரயில் நிலைய போலீசார் பிணத்தை கைப்பற்றினார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.
அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்பில்லை என்றும், நள்ளிரவில் யாராவது அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறனர்.












Click it and Unblock the Notifications