மதுரை அருகே பயங்கர விபத்து - 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே இன்றுகாலை நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலைத் தடுப்பில் மோதி உடைத்துக் கொண்டு எதிர் திசையில் வந்த கார் மீ்து மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது.
விருதுநகரிலிருந்து இன்று காலை ஒரு கார் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கள்ளிக்குடியில் கார் வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலைத் தடுப்பில் மோதி எதிர் திசைக்குப் பாய்ந்தது.
அங்கு வந்து கொண்டிருந்த இன்னொரு கார் மோதிய இந்த கார், பின்னர் வெங்கம்மா ஊரணி தடுப்பில் மோதி விழுந்து நின்றது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications