போலி பி.டெக். சான்றிதழ்: 'நான் அவனில்லை' பிட்டியின் குட்டு உடைந்தது

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி(32). அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த வாரம் அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.
பிட்டி கேரளாவில் ராகவ ராஜன் என்ற பெயரில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரிடம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி பெயருள்ள பி.டெக். சான்றிதழ் இருந்தது. அதில் அவருடைய பெயர் ராகவ ராஜன் என்று இருந்தது. இந்த சான்றிதழ் போலியானது என்பதை வழக்கை விசாரிக்கும் கேரள போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் அதே கல்வி நிறுவனத்த பெயரில் பிட்டி என்ற தன் சொந்த பெயரில் பி.டெக். சான்றிதழ் ஒன்றும் வைத்துள்ளார்.
பிட்டி தான் ராகவ ராஜன் தான் என்று சாதித்ததால் அவரை அடையாளம் காண கடந்த 12ம் தேதி கேரள போலீசார் அவரை ஜெய்பூர் அழைத்துச் சென்றனர். முன்னதாக கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றதாகக் கூறி பிட்டி கண்ணூரில் உள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்துள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications