நெல்லை சித்த மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பு

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிந்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழம், இலங்கைக்கு எதிராக ஐநாவில் இந்தியா திர்மானம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். பட்டமேற்படி டாக்டர் ரவிக்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் காத்தவராயன், தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பட்ட படிப்பு மாணவ, மாணவிகள் 500 பேர், பட்டமேற்படிப்பு மாணவர்கள் 180 பேர் பயிற்சி டாக்டர்கள் 100 பேர், உள்ளிட்ட 700ககும் மேற்பட்டோடர் கலந்து கொண்டுள்ளனர்.
வேண்டும், வேண்டும் தனி ஈழம் வேண்டும், தண்டனை வழங்கு, தண்டனை வழங்கு, ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கு, நிறைவேற்று, நிறைவேற்று இந்திய அரசே ஐநா அவையில் தீர்மானம் நிறைவேற்று ஆகிய கோஷங்களை எழுப்பினர். மேலும் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கோலார் தங்க வயல் பகுதியில் உண்ணாவிரதம்
கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
ஹைதராபாத்தில்
ஹைதராபாத்தில் இன்று மாலை 6 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, பேரணி நடைபெறுகிறது. மாதப்பூர் என்ற இடத்தில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications