இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என பார்லி.யில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

karunanidhi
சென்னை: இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தாம் வலியுறுத்தியதாகவும் இதை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆண்டனி மற்றும் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பினன்ர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தினேன். அவர்களும் அதை ஒப்புக் கொண்டு உறுதி அளித்திருக்கின்றனர்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இதற்கு ஆவண செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை தேவை. இந்த விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டையும் மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தேன் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+