அடிக்கடி மிரட்டி உறவு, திருமணத்திற்கு மறுப்பு, அடியாட்களுடன் வந்து தாக்குதல்!
சென்னை: சென்னை அருகே பொன்னேரியில் 40 வயதுப் பெண்ணை மோசடியாக ஏமாற்றி அடிக்கடி உறவு கொண்டு விட்டு திருமணம் செய்ய மறுத்து பின்னர் அடியாட்களுடன் போய் அந்தப் பெண்ணைத் தாக்கிய நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரியைச் சேர்ந்தவர் சுகந்தி. 40 வயதான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நானும், பொன்னேரியில் வசிக்கும் திருநாவுக்கரசு (44) என்பவரும் கும்மிடிப்பூண்டி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். திருநாவுக்கரசு கடந்த 5 வருடங்களாக அடிக்கடி எனக்கு போன் செய்து, என்னை காதலிப்பதாக தொல்லை கொடுத்தார்.
நான் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி, என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார்.
அதன்பின்னர் அடிக்கடி எனக்கு ஒரு மாத்திரையை கொடுத்து என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். நான் திருமண பேச்சை எடுத்தால் தட்டிக்கழித்து விடுவார். பின்னர் 5 மாதமாக என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் என் வீட்டிற்கு வந்தவர், உன்னை திருமணம் செய்வதில் சிக்கல் உள்ளது. நீ வேறு யாரையாவது திருமணம் செய்துக்கொள். அதற்கு ஆகும் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு நான், எதிர்ப்பு தெரிவித்தேன். உன்னால்தான் என் வாழ்க்கை பாழானது. நீ எனக்கு நம்பிக்கை மோசடி செய்தால் போலீசில் புகார் செய்வேன் என்றேன். இதனால் அடியாட்களுடன் என் வீட்டுக்கு வந்த அவர், என்னை அடித்து உதைத்ததுடன், போலீசுக்கு போனால் உன்னையும், உன் குடும்பத்தையும் சாகடித்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
எனவே ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த திருநாவுக்கரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசுவைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications