டெல்லியில் அரசுக்கு ஆதரவு வாபஸ்... சென்னையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்ட்!!

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது.
இந் நிலையில் டெல்லியில் இருந்து 7 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழு இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். நேராக கார்களில் தேனாம்பேட்டை சென்டாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்த ஆரம்பித்தனர்.
காலை 7.15 மணிக்கு அவர்கள் சோதனையை தொடங்கினார்கள். அந்த சோதனை 9 மணி வரை நீடித்தது.
மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜாசங்கரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் 19 இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு (department of revenue intelligence) தந்த தகவலின் பேரி்ல் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன் புலனாய்வுப் பிரிவு கேள்வி எழுப்பியதாகவும், அப்போதே அதற்கான விளக்கத்தை தந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தரப்பு கூறுகிறது.
இப்போது வேண்டுமென்றே முடிந்து போன ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாக திமுக கூறுகிறது.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications