கொ.மு.க. கோவிந்தா... பிறந்தது கொ.ம.தே.க.!
கோவை: கொங்கு நாடு முன்னேற்ற் கழகம் கட்சி உடைந்து விட்டது. புதிதாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை ஈஸ்வரன் தொடங்கியுள்ளார்.
கோவையில் நேற்று நடந்த விழாவில் இந்த புதிய கட்சியை ஈஸ்வரன் அறிவித்தார். கொமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர்தான் ஈஸ்வரன். அவருக்கும் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கட்சி தற்போது உடைந்து விட்டது.
புதுக்கட்சி தொடங்கிய ஈஸ்வரன் கூறுகையில், எந்த ஒரு இயக்கமும் போராட்டமில்லாமல் வெற்றிபெற முடியாது. ஆனால் போராட்டத்திலேயே தொடங்கும் கட்சிக்கு கிடைக்கும் வெற்றிக்கு பஞ்சமிருக்காது.
இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளால் அவினாசி- அத்திக்கடவு திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் நிறைவேறவில்லை. நொய்யல் நதி செத்துக் கிடக்கிறது. விசைத்தறி பிரச்சினை தீரவில்லை. தென்னை விவசாயிகள் 'கள்' இறக்க அனுமதி கிடைக்கவில்லை.
கொங்கு மண்டலத்துக்கு தேவையான திட்டங்களை அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்திருந்தால் தனியாக அரசியல் இயக்கம் தேவையில்லை. கொங்கு நாட்டின் உரிமைக்காகவும், இட ஒதுக்கீட்டுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் நமக்கென தனியாக இயக்கம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். அந்த இயக்கம்தான் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications