கோவையில் பேருந்து மோதி பெண் பலி- நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்- பஸ் தீ வைத்து எரிப்பு!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இன்று காலை தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலியானார். ஆனால் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டிச் சென்று தீ வைத்து எரித்தனர்.
கோவை மேட்டுபாளையம் சாலையில் பெட்டதாபுரம் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் இன்று காலை சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து அப் பெண் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்து என்று தெரிந்தும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பேருந்தை விரட்டிச் சென்று மத்தபாளையம் என்ற இடத்தில் வழி மறித்தனர். பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு பேருந்துக்கு அவர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications