கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: திமுக செயற்குழுவில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

DMK Meet

இதில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் - இனப் படுகொலை குறித்தும், நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றினை அமைத்து, குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்தி முடிப்பது குறித்தும்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்தும்; இந்தியாவே தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும், இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும்

2013, நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் அம்மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக்கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்க்கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நம் வேண்டுகோளையும் மீறி, மாநாடு இலங்கையில் நடத்தப்படுமானால், உலகத் தமிழர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையிலும், ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இந்தியா அம்மாநாட்டில் கலந்து கொள்ளாமல், அதனைப் புறக்கணிக்க வேண்டும், ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்காக போராடும் மாணவர்களுக்கு பாராட்டு என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+