தர்மபுரி கலவர வழக்கில் மேலும் 28 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்
சென்னை: தர்மபுரி அருகே காதல் திருமணத்தினால் உருவான கலவர வழக்கு தொடர்பான வழக்கில் மேலும் 28 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியில் கடந்த நவம்பர் மாதம் வெவ்வேறு பிரிவை சேர்ந்த இளவரசன்-வித்யா ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. தர்மபுரியில் உள்ள 3 தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சங்கரன் உள்பட 28 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.கருப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி 28 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 113 பேருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications