ஆண் துணையின்றி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் செல்ல தடை: கேரள அரசு அறிவிப்பு
கொச்சி: முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள கேரள அரசு தடை விதித்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் கடலங்குடியை சேர்ந்த அமினா குட்டி முகமது (64) என்ற பெண் ஹஜ் பயணம் செய்ய அனுமதி கேட்டு ஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பித்திருந்தார். அவர்மட்டும் தனியாக போவதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடாது என்று கூறி அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அமினா குட்டி தாக்கல் செய்த மனுவில், பெண் துணையுடன் ஹஜ் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் விசாரித்து அரசு பதில் மனு தாக்கல் செய்த உத்தரவிட்டது.
இதுதொடர்பாக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கேரள அரசு மூத்த வக்கீல் சாஜித், கோர்ட்டில் ஆஜராகி கூறுகையில், 'பெண்களின் பாதுகாப்பு கருதி தனியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த கமிட்டியின் விதிமுறைப்படி குடும்பத்தில் உள்ள ஆண் ஒருவருடன் சேர்ந்து பெண் பயணம் மேற்கொள்ளலாம். அந்த ஆண், அந்த பெண்ணுக்கு சகோதரர் அல்லது தந்தை உறவில் இருக்க வேண்டும்.இஸ்லாமிய சட்டப்படி அந்த ஆண் நபர் மெஹ்ரம் என்று அழைக்கப்படுகிறார்' என்றார்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications