அமைச்சர் பச்சைமாலின் கட்சி பதவி பறிப்பு: குமரி அதிமுக செயலாளராக நாஞ்சில் முருகேசன்- ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழ வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராக நாஞ்சில் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராக சிவ.குற்றாலம், மாவட்ட செயலாளராக நாஞ்சில் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக எஸ்.ஸ்டீபன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் இணை செயலாளராக டி.மனோகரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட அதிமுக செயலாளராக இதுவரை பச்சமால் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அமைச்சர் பச்சைமாலிடம் உதவியாளராக இருந்த சகாயத்துக்கும், வனத்துறை ஊழியர் ஆறுமுகத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் 2011ம் ஆண்டு ஆறுமுகம் அவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் மர்மான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சகாயம், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஜெகதீஸ்வரியின் தாயார் குமாரி உள்பட 4 பேர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந் நிலையில் தான் அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications