For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் அர்விந்த் கெஜ்ரிவால்!

By Mathi
Google Oneindia Tamil News

Arvind Kejriwal
டெல்லி:டெல்லியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் 8 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை இன்று நிறைவு செய்தார்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராகவும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள சுந்தர் நகரி முகாமில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. நேற்று 7-வது நாளாக அவரது போராட்டம் நீடித்தது. கெஜ்ரிவாலை நேற்று இரவு 11 மணியளவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், கெஜ்ரிவால் உடல் நலனைக் கருதி உண்ணாவிரதத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எட்டாவது நாளாக கெஜ்ரிவாலின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்த நிலையில் இன்று காலை தமது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். அன்னா ஹசாரே வேண்டுகோளை ஏற்று அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Anna Hazare visited Aam Aadmi Party (AAP) convenor Arvind Kejriwal late on 29 March night though he had repeatedly expressed his unwillingness to support any political party in the past. Kejriwal is on an indefinite fast to protest against escalating power and water bills in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X