For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: மதுரையில் நேற்று நூதன புகாருடன் கலெக்டரிடம் வந்து நின்றார் குமாரசாமி என்பவர்.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் நேற்று நூதன புகாருடன் கலெக்டரிடம் வந்து நின்றார் குமாரசாமி என்பவர்.

அந்த சோகக் கதையைக் கேளுங்கள்...

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி பெயர் சந்திராதேவி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் பி.இ. படிக்கிறாராம். இன்னொருவர் 10ம் வகுப்பு படிக்கிறாராம்.

நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு நாயுடன் வந்தார் குமாரசாமி. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தபோது அவர் சொன்னது இது...

எனது வீட்டை எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தேன். அதன் பின்னர் அவரது நடத்தையே மாறிப் போனது. நான் நாய் வளர்க்கக் கூடாது என்று கண்டிக்க ஆரம்பித்தார். இப்போது எனது வீட்டை வேறு ஒருவருக்கு ரூ. 10 லட்சத்துக்கு விலை பேசி விற்று விட்டார்.

மேலும் என்னையும், எனது நாயையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இப்போது நானும் என் நாயும் நடு ரோட்டில் நிற்கும் நிலை வந்து விட்டது என்றார்.

பின்னர் ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ராவை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தார் குமாரசாமி.

'கூல்டவுன்' குமாரசாமி.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்!

English summary
A Madurai man came to collectorate with his dog and a complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X