ஒரு நாய், ஒரு சிங்கக் குட்டி, ஒரு புலிக்குட்டி.. தென்ஆப்பிரிக்காவில் ஒரு அதிசய கூட்டுக் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் ஒரு கால்நடை பெண் மருத்துவரின் முயற்சியால் நாய்க் குட்டி, சிங்கக்குட்டி, புலிக்குட்டி ஆகியவை ஒற்றுமையாக ஒரே இடத்தில் வசிக்கும் அதிசயம் அரங்கேறியுள்ளது.

இதில் வினோதம் என்னவென்றால் சிங்கக் குட்டி, புலிக்குட்டிஆகியவற்றுக்கு நாய்க்குட்டி பயிற்சி அளிப்பதுதான்.

ஹியுகோ என்ற பெயர் கொண்ட இந்த புல்டாக்தான், சிங்கக் குட்டிக்கும், புலிக்குட்டிக்கும் பல்வேறு வேலைகளைச் சொல்லிக் கொடுத்து பயிற்சி தருகிறதாம்.

சண்டை போடப்படாது...

சண்டை போடப்படாது...

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் இடையில் புகுந்து அமைதிப்படுத்துவது, சாப்பிடும்போது சண்டை போடாமல் பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது என படு சமர்த்தாக, பொறுப்பாக செயல்படுகிறது இந்த நாய்க்குட்டி.

இளம் டாக்டரின் முயற்சி

இளம் டாக்டரின் முயற்சி

இந்த வித்தியாசமான கூட்டணிக்கு வித்திட்டவர் 26வயதேயான இளம் கால்நடை மருத்துவரான ஆர் லாஸ்மி ஆவார்.

கார்டியன் நாய்

கார்டியன் நாய்

ஹியூகோ நாயின் உரிமையாளர்தான் லாஸ்மி. இவர்தான் வெள்ளை நிற சிங்கக் குட்டியையும், வெள்ளை நிற புலிக்குட்டியையும் தனது பண்ணை இல்லத்திற்குக் கொண்டு வந்து வளர்த்து வருகிறார். இவர்களுக்குத்தான் ஹியூகோ கார்டியனாக இருக்கிறது. போர்ட் எலிசபெத்தில் இந்த பண்ணை வீடு உள்ளது.

முதலில் பயம்.. பிறகு சந்தோஷம்

முதலில் பயம்.. பிறகு சந்தோஷம்

இந்த வித்தியாசக்கூட்டணி குறித்து லாஸ்மி கூறுகையில், முதலில் சிங்கக் குட்டியும், புலிக்குட்டியும் இங்கு வந்தபோது மிகவும் குட்டியாக இருந்தன.இதனால் ஹியூகோவுடன் அவை விளையாடப் பயந்தன. ஆனால் போகப் போக பயம் தெளிந்து அவை ஹியூகோவுடன் நட்பாகப் பழகத் தொடங்கின. இப்போது என்னை விட ஹியூகோவிடம்தான் அவை ஒட்டி உறவாடுகின்றன என்றார் புன்னகைத்தபடி.

ஹியுகோப்பா...

ஹியுகோப்பா...

பண்ணை இல்லத்துக்கு அருகே பிரிடேட்டார் பார்க் உள்ளது. இங்குதான் இந்த மூன்று குட்டிகளும் பகலில் பொழுது போக்குகின்றனவாம். சிங்கக்குட்டி மற்றும் புலிக்குட்டிக்கு அப்பா போல ஹியூகோ செயல்படுவதாக பெருமையுடன் கூறுகிறார் லாஸ்மி.

மனுசங்களைப் போலவே...

மனுசங்களைப் போலவே...

இந்தமூன்று குட்டிகளுக்கும் வாக்கிங், ஸ்விம்மிங் என அனைத்துப் பயிற்சிகளையும் கொடுக்கிறாராம் லாஸ்மி.எனவே மனிதர்களைப் போலவே இவையும் வளர்ந்து வருகின்றன

நான்கு மனிதர்கள் ஒன்றாக கூடினாலே நாஸ்தியாகும் இந்தக் காலத்தில் மூன்று வகையான பிராணிகள் ஒற்றுமையுடன் வளர்வது ஆச்சரியமான விஷயம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+