காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
மேலும் அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், மாட்டு பாஸ்கர், சின்னா உள்ளிட்டோரும் கைது செய்யபப்பட்டனர். இதில் கைதான ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். இந்த வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கதிரவன் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 12 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் கதிரவன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனால் கதிரவனின் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விசாரணையை நீதிபதி முருகன் வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் வெளியாகும் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications