கூலிப்படை மூலம் என்னை கொலை செய்ய முயற்சி: அன்னா ஹசாரே 'திடுக்' தகவல்

Subscribe to Oneindia Tamil

Anna Hazare reveals that his life is under threat
அம்பாலா: ஊழலை எதிர்த்து போராடி வரும் தம்மை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்று சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

ஜனதந்திரா யாத்ரா என்ற பெயரில் ஊழலை எதிர்த்து பிரசார பயணம் மேற்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே நேற்று ஹரியானா மாநிலம் அம்பாலா நகருக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்புடன் தான் ஊழலை ஒழித்து நமது நாட்டை காப்பாற்ற முடியும். ஊழலை ஒழிக்கும் எனது இரண்டாம் விடுதலை போராட்டத்திற்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

தேர்தல்களில் வாக்களிக்கும் போது மக்கள் வாக்குரிமையின் மதிப்பை அறிந்து ஊழலற்ற நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். ஊழலை எதிர்த்து போராடி வரும் என்னை கொல்ல சிலர் கூலிப்படையினரை ஏவி விட்டுள்ளனர். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+