ஓ காட்!...கடவுள் அட்ரஸ் என்ன? 8ம் வகுப்பு மாணவர்களை குழப்பிய கேள்வி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அறிவு, தைரியம் கொடுக்க வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதுமாறு தேர்வில் கேட்கப்பட்ட வினாவால் சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்கள் குழம்பினர்.
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்கள் 3ம் பருவத் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று ஆங்கிலம் தேர்வு நடந்தது. அதில் அறிவு, தைரியம் அளிக்குமாறு கடவுளுக்கு கடிதம் எழுதுமாறு ஒரு கேள்வி இருந்தது. கற்றல் குறைபாடு உள்ள மாணவர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதுவது போன்று துணைப்பாடத்தில் ஒரு பாடம் உள்ளது.
அதன் அடிப்படையில் தான் இந்த கேள்வி கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் அனுப்புநர் முகவரியில் தங்கள் பெயர் மற்றும் முகவரியை எழுதினர். ஆனால் பெறுநர் முகவரியில் கடவுளுக்கு எந்த முகவரியை குறிப்பிடுவது என்று புரியாமல் குழம்பினர்.












Click it and Unblock the Notifications