இலங்கையில் நடத்த எதிர்ப்பு! காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை சந்திக்கிறது திமுக எம்.பிக்கள் குழு!

சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்குநடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திமுகவும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26-4-2013 அன்று இலண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications