பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்க்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை
வாஷிங்டன்: பெற்ற குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற தாய்க்கு 50ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் கேத்தி ஸ்டாக்டன் (32). இவர் சில ஆண்டுக்கு முன்பு ரகசியமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதை ஒரு பைக்குள் உயிருடன் அடைத்து வீதியோரம் போட்டு விட்டார்.
குளிர் தாங்காமல் அந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டது. அங்குள்ள சட்டத்தின்படி முறையற்று குழந்தை பிறந்தாலும் அதை காப்பகத்தில் ஒப்படைத்து விடலாம். யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். இதை மீறியதால் கேத்தி மீது போலீசார் வழக்கு போட்டனர். ஆனால் மருத்துவ சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவருடைய காரை சோதனை போட்டபோது, டிக்கி பகுதியில் பழைய டயருக்கு அடியில் மேலும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்தன. இவையும் அவரே பெற்றெடுத்த குழந்தைகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஈவு இரக்கமற்ற கொலைகளை செய்த கேத்தேவுக்கு சமீபத்தில் கோர்ட் 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications