காந்தி காட்டிய ’வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கு’ தான் மன்மோகன் சிங்: நிதின் கட்காரி கிண்டல்
Subscribe to Oneindia Tamil

பா.ஜ.க. ஆண்டு விழாவை முன்னிட்டு நாக்பூரில் பேசிய அவர் கூறியதாவது:-
மேல் உலகத்தில் உள்ள காந்தி, சித்ரகுப்தனிடம் 'எனது 3 குரங்குகள் பூமியில் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கின்றன?' என்று கேட்பது போல் எனக்கு சமீபத்தில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. இதற்கு சரியான பதில் கூற வேண்டும் என்றால்.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் முதல் குரங்கு போல் இந்த நாட்டின் சட்டம் உள்ளது.
வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கைப் போல் எது குறித்தும் பேசாமல் பிரதமர் மன்மோகன் சிங் கடைபிடிக்கும் மவுனம் அமைந்துள்ளது. காதை மூடிக் கொண்டிருக்கும் குரங்கிற்கு இணையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications