மாணவர்கள் போராட்டத்தில் சிக்கியதன் எதிரொலி: சிதம்பரத்துடனான சந்திப்பை ரத்து செய்த மமதா

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ராவுடன் நேற்று மாலை டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரை எதிர்த்து இடதுசாரி மாணவர்கள் கோஷமிட்டனர். கொல்கத்தாவில் கடந்த வாரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுதீப்தோ குப்தா தலையில் படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அவர் போலீசார் தாக்கியதில் தான் மரணம் அடைந்தார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
சுதீப்தோ மரணம் ஒரு அல்பமான விஷயம் என்று மமதா தெரிவித்ததை எதிர்த்து தான் மாணவர்கள் கோஷமிட்டனர். அப்போது மாணவர்கள் அமித் மித்ராவை தாக்கினர். இதில் அவரது ஜிப்பா கிழிந்தது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மமதா திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவை திட்ட ஆரம்பித்தார்.
இன்று மமதா மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார். மேலும் இன்றே கொல்கத்தாவுக்கு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக நேற்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த செய்தியாளர் கூட்டத்தையும் மமதா ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications