பொடுசுகளின் விபரீத விளையாட்டு... அமெரிக்காவில் 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் விளையாடும் போது தவறுதலாக, 4 வயது சிறுவன் சுட்டதில் படுகாயமடைந்தான் 6 வயது சிறுவன் ஒருவன்.
அமெரிக்காவில் 4 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று விளையாடி இருக்கிறான். இதில் எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கியிலிருந்த குண்டு 6 வயது சிறுவனின் நெற்றியில் பாய்ந்து இருக்கிறது.
இச்செய்தி சுட்டவனின் தாயாருக்கு தெரியவர, அவர் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தெரிவித்து இருக்கிறார். அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும், சிறுவனின் பாதிப்புகள் குறித்த எந்த செய்தியும் இதுவரை வெளியிடப்படவில்லை. சிறுவன் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனால், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கத்தவறிய பெற்றோர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
நம்ம நாட்டில் தொட்டுப் பிடித்து விளையாடுவார்கள்... அமெரிக்காவிலோ சுட்டு சுட்டுவிளையாடுகின்றனர். காலக் கொடுமைதான்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications