திருச்சி சிவா எம்.பி. வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை! பீகார் இளைஞர் மீது புகார்!!
திருச்சி: திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான திருச்சி சிவாவின் வீட்டில் 20 பவுன் நகையுடன் மாயமான பீகார் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கண்டோமெண்ட் ஸ்டேட் வங்கி காலனில் திருச்சி சிவானின் வீடு உள்ளது. ஆனால் திருச்சி சிவா மனைவியுடன் டெல்லியில் தற்போது தங்கியிருக்கிறார். அவரது மகன் சூர்யா மட்டும் இந்த வீட்டில் இருக்கிறார். இங்கு பீகாரைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் சிவா எம்.பி. சார்பில் திருச்சி கோர்ட் போலீசில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் திருச்சி சிவா மனைவியின் 20 பவுன் நகைகள் மாயமாகி விட்டது என்றும் ஆனால் வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாமலும் இருந்தது கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நேரத்தில் சிவா எம்.பி.யின் வீட்டில் வேலை பார்த்து வந்த பீகார் இளைஞர் ராஜேஸ் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர்தான் சிவா வீட்டில் நோட்டமிட்டு நகைகளுடன் மாயமாகி இருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர் சிவா எம்.பி.யின் வீட்டில் நகை பணம் வைக்கும் இடங்களை தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் சாவியை எடுத்து நகையை திருடிக்கொண்டு மாயமாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications